கரூர், மே 30 - கரூரில் பழிவாங்கும் நோக்குடன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் 7 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இதை கண்டித்து போராட் டம் அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் தலைமையில் 14.5.2022 அன்று நடைபெற்ற சுமூக பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக மாநில மையம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 24.5.2022 அன்று மூன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளுக்கு புறம்பாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர் வழங்கி யுள்ளார். ஆசிரியர் விரோத நோக்குட னும், அரசு ஆணைகளை மதிக்காமல் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் மதன்குமார் செயல்படுவது கடுமை யாக கண்டிக்கத்தக்கது. பழிவாங்கும் நோக்கத்துடன் வழங்கப் பட்ட பணிமாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட குழு சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட் டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.கே.முருகன் தலைமை வகித்தார்.
கரூர் மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை பொதுச் செயலாளர் தா.கணேசன் உண்ணா விரதப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். முன்னாள் மாநிலத் தலைவர் ச.மோசஸ், திண்டுக்கல் மாவட்ட செய லாளர் எஸ்.அந்தோணிதாஸ், திருச்சி மாவட்ட செயலாளர் சி.ஆரோக்கிய ராஜ், பெரம்பலூர் மாவட்ட அமைப்பா ளர் சின்னச்சாமி, கரூர் மாவட்ட தலை வர் வீ.மோகன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து சிறப்பு ரையாற்றினார். இதில் திருச்சி, பெரம்ப லூர், கரூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.