கரூர், டிச.6 - வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கும், இறைச்சிக் கூடங்களில் கால்நடைகளை வதை செய்வதற் கும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
பிராணிகள் வதை தடுப்பு சங்கம், கரூர் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தொடர்பான கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் கூறுகையில், “கால் நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரா ணிகள் வதை தடுப்பு சங்கம் மாவட்ட ஆட்சியரை தலைவராக வும், காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களை உறுப்பி னர்களாக கொண்டு செயல்படுகிறது. கால்நடைகளை வாகனங்களில் பின்வரும் விதிமுறை களை கருத்தில் கொண்டு ஏற்றிச் செல்ல வேண்டும்.
கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் முன்னர் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம், ஏற்றிச் செல்வதற்கான காரணம், வாகன எண் போன்ற தகவல்களுடனும் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடனும் ஏற்றிச் செல்ல வேண்டும்.
கால்நடைகளை ஏற்றுவதற்கு முன் லாரியில் கால்நடை கள் வழுக்கி விழாமல் இருக்க 6 இஞ்ச் உயரத்திற்கு வைக் கோல் அல்லது தென்னை நார்கள் போன்ற பொருட்களை போட வேண்டும். ஒவ்வொரு 2 மணி நேர பயணத்திலும் ஒரு முறை குடிநீரும், 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தீவனமும் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
மேலும், 6 மணி நேரத்திற்கு ஒருமுறை இறக்கி ஏற்றவும் வேண்டும். கால்நடை களுக்கான முதலுதவி மருந்து மற்றும் கால்நடை காப்பாளர் வண்டியில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு செய்வர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் தெருக்கள் மற்றும் சாலைகளில் உணவு தேடி திரிய அனுமதிக்கும் கால்நடை உரிமையா ளர்களுக்கு அதிகப்படியான அபராதம் மற்றும் தண்டனை அளிக்க பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது.
இறைச்சி அறுவைக் கூடங்களில் கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ் பெற்ற கால்நடைகளை மட்டுமே வதை செய்ய வேண்டியது அவசியமாகும். பொது இடங்களில் கால்நடைகளை கொல்வதும், மனிதாபிமானமற்ற முறையில் உணவிற்காக வதை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.