கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 80 சதவீத பொருட்கள் எரிந்து நாசமாகின.
கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் சாஸ்தா சீட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் குடோனிலிருந்து கனரக வாகனத்தில் ஊழியர்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலுள்ள கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாகவும், அதில் 80 சதவீத பொருட்கள் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி போராடி முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படாமல் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.