districts

மைக் செட் வழங்கிய அரசு ஊழியர்

கரூர், ஜன.13- கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனி வேல் ராஜன். இவர் நங்கவரம் கிராம நிர்வாக அலுவலராக  பணியாற்றி வருகிறார்.  இவர் அரசு ஊழியர் சங்க கூட்டங்களில் பயன்படுத்தும் வகையில் ரூ.15, 500 மதிப்புள்ள ஸ்பீக்கர், மைக்கை தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மொ. ஞானத்தம்பியிடம் வழங்கினார்.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல்  வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம், அரசு  ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.