districts

img

அமித்ஷாவை பதவி நீக்கம் செய்க! அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.22- டாக்டர் அம்பேத்கரை நாடாளு மன்றத்தில் அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின்  மநுவாத வெறுப்பு பேச்சைக் கண்டித் தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மக்கள் விரோத மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்  குளித்தலை ஒன்றியக் குழு சார்பில்  குளித்தலை காந்தி சிலை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் இரா.முத்துச்செல் வன் தலைமை வகித்தார். கட்சியின்  கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் சரவணன்,  காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் என்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.  

கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியம் சார்பில் நாச்சியார் கோவில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செய லாளர் வீரக்குமார் தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பினர்  பழனிவேல் கண்டன உரையாற்றினார். கும்பகோணம் ஒன்றியம் சோழ புரம் கடை வீதியில் சிபிஎம், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒன்றிய தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரு மருகல் கடைத் தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமரு கல் ஒன்றியச் செயலாளர் பி.எம்.லெனின் தலைமை வகித்தார்.

சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர்  வி.மாரிமுத்து உரையாற்றினார்.  கீழையூர் கடைத்தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  வி.சுப்பிரமணியன் கண்டன உரை யாற்றினார். வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வேதை தெற்கு ஒன்றிய செயலாளர் வி. அம்பிகாபதி தலைமை வகித்தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன  உரையாற்றினார்.

 வேதாரண்யம் வடக்கு ஒன்றியம்  கரியாப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வேதை வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழ கன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு கண்டன உரையாற்றினார்.