districts

img

வயநாடு : வாலிபர் சங்க குமரி மாவட்டக்குழு ரூ. 4 லட்சம் அளிப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டக் குழு சார்பில் வயநாடு நிவாரண நிதியாக, தக்கலை,  மார்த்தாண்டம், அருமனை, நல்லூர் ஆகிய மையங்களில் ‘டீக்கடை’, ‘பிரியாணி மேளா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் வசூல் செய்த தொகை ரூபாய் 4 லட்சம், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரதீஷ், தலைமையில் ஒப்படைக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட், பொருளாளர் விஷ்ணு, இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெர்லின் ஜோஸ் மற்றும் லத்திகா மேரி, விசித்திர சங்கர், ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.