districts

img

40 நொடிகளில் 100 மீட்டர் தூரம் ஓட்டம் 15 கிலோ எடையை தூக்கி இரண்டரை வயது சிறுவன் உலக சாதனை

அருமனை, டிச.24- இரண்டரை வயது சிறுவன், 40 நொடிகளில் 100 மீட்டர் தூரம் ஓடியதுடன் 15 கிலோ எடையை வெகு சாதாரணமாக தூக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்  அருமனை அருகே மஞ்சாலு மூடு பகுதியைச் சேர்ந்த வர்கள் சஜின் - ராஜிகா  தம்பதியினர். இவர்களு டைய இரண்டரை வயது மகன் சாய்ரியாஷ், சிறு வயது முதலே வீட்டில் இருக்கும் அதிக எடை கொண்ட பொருட்கள், சிறு  குழந்தைகளை தூக்கிக் கொண்டு திரிவதை பொழுது போக்காக கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட பெற் றோருக்கு, தங்களது குழந் தையை ஏதேனும் சாதனை புரிய வைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சமூக  வலைதளங்களில் ஏற்கனவே  சாதனை புரிந்தவர்கள் குறித்த வீடியோக்களை தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, 2 வயது 10 மாதம் நிறைவடைந்த குழந்தை  ஒன்று, 100 மீட்டர் தூரத்தை 41  நொடிகளில் ஓடி சாதனை புரிந்து இருந்தது தெரிய வந்தது. தங்களது குழந்தை யும் ஓடுவதில் கில்லாடி என்பதை புரிந்து கொண்ட பெற்றோர் வெளியே அழைத்து சென்று பயிற்சி வழங்கி உள்ளனர்.

இந்த பயிற்சியின் விளை வாக, ஏற்கனவே சாதனை யாக பதிவு செய்து வைத் திருந்த நேரத்தை விட, ஒரு நொடி குறைவாக இரண்டு வயது 5 மாதத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார். மேலும் 15 கிலோ எடையை மிகச் சாதாரணமாக தூக்கி, இரண்டு குழந்தைகள் தனித் தனியாக செய்து வைத் திருந்த சாதனையை தனி ஒருவனாக செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெருமை சேர்த்து உள்ளார் சாய்ரியாஷ்.  குழந்தையின் சுட்டித்  தனத்தால் பலரது விமர்சனத் திற்கு ஆளான பெற்றோர் தற்போது செல்லும் இடங்க ளில் எல்லாம் தனது குழந்தை யால் பெருமை அடைந்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.