districts

img

திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ஆவது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சூழும் பகுதியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம், தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் இடையே இந்தியாவின் முதல் கடல்சார் கண்ணாடிப் பாலம் நேற்று திறக்கப்பட்டது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் அமைப்பது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும். இதனை தொடர்ந்து, இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ஆவது நாள் நிகழ்ச்சியில், திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், வெள்ளி விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். 
இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளூவர் சிலைக்கு செல்ல 3 புதிய சுற்றுலா படகுகள் வாங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
படகுகளுக்கு காமராஜர், நேசமணி மற்றும் ஜி.யு.போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிலரங்கம் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும். தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதப்படுவதற்கு ஊக்குவிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.