குழித்துறை, டிச.23- மார்த்தாண்டம் சாலை ஓரத்தில் செயல்பட்ட காய்கறி கடைகள் உள்பகுதிக்கு மாற்றப்பட்டது.
இதனால் போக்கு வரத்து நெருக்கடி சீரானது. மார்த்தாண்டம் சந்தை ரூ 14 கோடியே 87 லட்சம் செல வில் பரந்து விரிந்த இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால் இங்கு செயல்பட்ட மார்க்கெட் தற்காலிகமாக லாரி பேட்டை க்கு மாற்றப்பட்டது. இங்கு போதுமான இடம் இல்லாததால் மார்த்தாண்டம் காந்தி மைதானத்திற்கும் பேருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட சாலை ஓரத்தில் ஏராளமான காய்கறி கடைகள் செயல்பட்டு வந்தன.
இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது வாகனங்களும் நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குழித்துறை நகராட்சி நிர்வாகம் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர். தற்காலிக சந்தை அருகே குப்பைகள் போடும் கிடங்கு செயல்பட்டு வந்தது. தற்போது குப்பை கள் தரம் பிரிக்கப்பட்டு மார்த்தாண்டம் கீழ்பம்பம் பகுதிக்கு கொண்டு செல்லப் படுகிறது.
இங்கிருந்த குப்பைகள் அரியலூர் சிமெண்ட் ஆலை க்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தை அருகே உள்ள கிடங்கு முழுமையாக தண்ணீர் வைத்து சுத்தம் செய்யப்பட்டு தாராள இட வசதி செய்யப்பட்டுள் ளது. இந்த பகுதிக்கு சாலை ஓரத்தில் செயல்பட்ட தற்கா லிக கடைகள் மாற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து நெருக்கடி சீரானது.