districts

img

குமரியில் விடிய விடிய மழை ரப்பர் பால் வடிப்பு தொழில் முடக்கம்

அருமனை, ஆக.14- குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு தொழில் பாதிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மழை பெய்து வேலையின்றி தவித்த ரப்பர் பால்வடிப்பு தொழிலாளிகள் கடந்த 2 வாரங்களாக வேலை செய்து செய்த வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருவது ரப்பர் தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் கவலை அளித்துள்ளது.

மழை காரணமாக அருமனை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செவ்வாயன்று காலை 8 மணியிலிருந்து மாலை வரைக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இரவிலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை காலை வரையிலும் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனாால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் நபர்கள் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர். விடிய விடிய மழை பெய்ததால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருமனை அருகே கண்டன்சிறை கால்வாயில்அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் குளிக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.