அருமனை, ஆக.2- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் குளிப்பதற்கு திற்பரப்பு பேரூராட்சி நிர்வா கம் அனுமதி வழங்கியுள்ளது
சில நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்காததால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால் அப்பகுதி யில் கடைகள் நடத்துபவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தற்போது குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.