காஞ்சிபுரம், ஆக.5 – தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கொரிய நிறுவனம் மண்டியிடும் காலம் நிச்சயம் வரும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வள்ளூரில் உள்ள எஸ்.எச்.சி எலக்ட்ரானிக்ஸ் என்ற தென்கொரிய தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைத்ததற்காக 12 தொழிலா ளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் பழிவாங்கலை கண்டித்து நடைபெற்று வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், சட்டப்படி தொழிற்சங்கம் அமைக்கப்படும் போது அதை தடுக்க முயற்சிப்பவர்கள் சட்டத்தை மீறுபவர் களாக கருதப்படுகிறார்கள். ரூ.100 கோடி செலவு செய்தாலும் செய்வேன். ஆனால் சங்கத்தை அங்கீக ரிக்கவே மாட்டேன் என ஆலைநிர்வாகம் சங்கத்தை அனு மதிக்க மறுக்கிறது.
இந்நிலையில் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, நிர்வாகம் தொழிற்சங்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது தொழிற் சங்கத்தை அங்கீகரித்துள்ளது. சமீப காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
தென்கொரியநாட்டில் ஆணவத்தின் உச்சமாக கருதப்பட்ட சாம்சங் நிறுவனத் தையே தொழிலாளர் வர்க்கம் போராட்டத் தின் வாயிலாக மண்டியிட வைத்தது என்பது வரலாற்று நிகழ்வாகும். அதே போல தமிழகத்திலும் சாம்சங் நிறுவனம் மண்டியிடும் என்றார்.
இந்த போராட்டத்தில் சங்கத்தின தலை வர் இ.முத்துக்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் உள்பட ஏராளமான தொழிலாளர்களும் பலர் கலந்து கொண்டனர்.