காஞ்சிபுரம்,செப்.17- பெரும்பான்மை தொழிலாளர்கள் அங்கீகரித்த தொழிற்சங்கத்தை சாம்சங் நிர்வாகம் பகிரங்கமாக மிரட்டுவதாகவும் போட்டி சங்கத்தை ஏற்படுத்துவோம் என்று கூறுவது அராஜகத்தனம் என்றும் சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ .சவுந்தரராசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு ஒன்றினை வழங்கினார்.
அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருபெருமந்தூர் வட்டத்தில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் 1810 நிரந்தர தொழிலாளர்களில் 1500 பேர் இணைந்து சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை (சிஐடியு) 16-6-2024 அன்று ஏற்படுத்தினர்.
சங்கம் அமைக்கப்பட்ட தகவல் தெரிந்த பிறகு சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்க ளை தொழிற்சங்கத்தில் இருந்து வெளி யேறுமாறு பல வகையான நிர்ப்பந்தங்க ளையும் கடும்அச்சுறுத்தல்களையும் தொழிற்சாலைக்குள் சாம்சங் நிர்வாகம் மேற்கொண்டது. தனித்தனியாக தொழி லாளர்களை சந்தித்து அச்சுறுத்தியது.
தொழிற்சங்கத்திற்கு எதிராக அரங்க கூட்டம்
ஹால் மீட்டிங் என்ற பெயரில் தொழிலா ளர் பங்கேற்கும் கூட்டம் ஆலையில் நிர்வா கம் ஏற்பாடு செய்து அதில் தொழிற்சங் கத்திற்கு எதிராக பகிரங்க அச்சுறுத்தல்க ளை நிர்வாகம் வெளிப்படுத்தியது. தொழிற் சாலை சட்ட விதிகளுக்கு எதிராக 11 மணி நேரம் மிகைபணி செய்யுமாறு தொழிலா ளர்கள் தொடர்ந்து கட்டாயப்படுத்தப் பட்டனர். சிஐடியு தொழிற்சங்கத்தில் தொடர்ந்து செயல்பட்டால் வேலை பாது காப்பு இருக்காது என்றும் எதிர்காலத்தில் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்றும் நிர்வாகம் பகிரங்கமாக தொழிலாளர்களை அச்சுறுத்தியது.
தனிமை அறையில் அடைப்பு
தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகி களின் தனிமனித உயிருக்கும் உடை மைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தடித்த வார்த்தைகளால் தொழிலாளர் மத்தியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் நிர்வாக ஆதரவு பெற்ற கமிட்டி உறுப்பினர்கள் ஆலைக்குள்ளேயே செயல்பட்டனர். இவைகளை பகிரங்கமாக தவறு என்று சுட்டிக் காட்டிய எங்கள் தொ ழிற்சங்க நிர்வாகியை இரண்டு தினங்கள் தனிமை அறையில் உட்கார வைத்து மன உளைச்சலுக்கு நிர்வாகம் உள்ளாக்கியது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் அனைத்துமே 1947 தொழிற்தகராறு சட்டம் அட்டவணை 5 பிரிவின்படி முதலாளி செய்யக்கூடாத குற்றமாகும்.
வீடுகளுக்கு சென்று மிரட்டல்
மேலும் தொழிலாளர்களின் வீடுக ளுக்கு சென்று சிஐடியு தொழிற்சங்கத் தில் இருந்து தொழிலாளர்களை வெளி யேறுமாறு அவர்களின் குடும்பத்தாரிடம் நிர்வாகம் நேரடியாக தொழிற்சங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை செய்தது. ஒவ் வொரு நாளும் தொழிற்சங்கத்தை உடைக்கவும் தொழிற்சங்க நிர்வாகிகளை நிம்மதியாக ஆலைக்குள் பணி செய்ய விடாமல் அச்சுறுத்தவும், விடுப்பு மறுப்பு, மிகை பணி என பல்வேறு விதமான தொ ழிற்சங்க விரோத நடவடிக்கைகளில் நிர்வா கம் ஈடுபட்ட காரணத்தினால் ஆலைக்குள் மேலும் தொழிலாளர்கள் இதே நிலைமை யை எதிர் கொண்டால் வன்முறையும் தொழில் அமைதியின்மையும் ஏற்படும் என் பதால் 19-08-2024 அன்று தொழிற்சங்கம் நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.
தொடர்ந்து நெருக்கடி அளித்த நிர்வாகம்
தொழிற்சங்கம் வழங்கிய வேலை நிறுத்த நோட்டீஸ் அடிப்படையில் தொழிலா ளர் துறையில் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதி லும் தொழிற்சங்கத்திற்கு எதிராக ஏற் படுத்திய நெருக்கடியை கைவிட நிர்வாகம் முன்வரவில்லை. தொழிலாளர் நலத்துறை நடத்திய பேச்சு வார்த்தையில் பல சங்கங்கள் உருவாவது தவிர்க்க முடியாது என்று பகிரங்கமாகவே நிர்வாகம் வாக்கு மூலம் அளித்தது.
உரிமையை மறுப்பதா?
தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 பேர் அல்லது மொத்த தொழிலாளர்களில் 10% பேர் ஒன்று கூடி அவர்கள் சங்கம் அமைக்க முடிவு செய்தால் சங்கத்தை அமைத்துக் கொள்ளவும் பதிவு செய்து கொள்ளவும் நமது நாட்டின் 1926 தொழிற்சங்க பதிவு சட்டம் தொழிலாளர்க ளுக்கு உரிமை அளிக்கின்றது.
சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை மேற்கண்ட சங்கம் அமைக்கும் சட்டப்படியான உரிமைக்கு எதிராக பகிரங்க மாகச் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு சட்டப்படியான நீதிகிடைத்திட உதவிட வேண்டும்.
1810 நிரந்தர தொழிலாளர்களில் 1500 தொழிலாளர்கள் எங்கள் தொழிற்சங் கத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள பெரும்பான்மை தொழிற் சங்கம் என்கிற முறையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) என்ற எங்கள் பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க நிர்வாகம் முன்வர வேண்டும்.
தொழிற்தகராறு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
தொழிற்சங்கம் எழுப்பியுள்ள கோரிக் கைகளின் மீது எங்கள் சங்கத்தோடு தொடர்ந்து பேசவும் கோரிக்கை மீது சுமுக தீர்வு காணவும் சட்டத்தின் வழியிலான கூட்டு பேர உரிமைக்கு நிர்வாகம் ஒப்புக் கொள்ள வேண்டும்,உலகத் தொழிலாளர் ஸ்தாபனம் (ஐ.எல்.ஒ) முன்பு கூட்டு பேர உரிமைக்கு ஒப்புதல் அளித்து கையெ ழுத்திட்ட நாடுகள் என்கிற முறையில் தென் கொரிய நாட்டின் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். தொழிற்சா லைக்குள் நிறுவனமே போட்டி அமைப்பு கள் மற்றும் கமிட்டிகளை உருவாக்குவது போன்ற 1947 இந்திய தொழிற்தகராறு சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுமையாக கைவிட முன் வர வேண்டும்.
நிரந்தரத் தொழிலாளர்கள் 80 விழுக் காட்டினர் வேலை நிறுத்தத்தில் உள்ள போது ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சியா ளர்கள், நிறுவன ஊழியர்கள், வேறு தொழிற் சாலைகளை சேர்ந்தவர்களை வைத்து சட்ட விரோத நேரடி உற்பத்தியில் ஈடுபடுவதை நிர்வாகம் நிறுத்த வேண்டும்.