சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் சிறையிலடைப்பு
காஞ்சிபுரம், செப். 16 - ‘சாம்சங்’ தொழிலா ளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக திங்களன்று 8- ஆவது நாளாக தங்களின் வேலைநிறுத்தப் போராட்ட த்தை தொடர்ந்தனர்
அத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமும் நடத்த முயன்ற நிலையில், தமிழக காவல்துறை அராஜகமான முறையில் அவர்களை முன் கூட்டியே கைதுசெய்துள்ளது.
பெரும்பான்மை தொழி லாளர்கள் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கத்தை அங்கீ கரிக்க வேண்டும், ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர் சங்க கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும், ஆலைக்குள் நிறுவனத் திற்கு ஆதரவான கமிட்டி யில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும், வேலை நிறுத்த போராட்டத்தில் சுமூக தீர்வுக்காண மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலை யிட வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது தான், தொழி லாளர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரம் முழு வதும் ஏராளமான காவ லர்கள் குவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் உள்ள சிஐடியு அலுவலகத்திலிருந்த சிஐ டியு மாநிலச் செயலாளர் முத்துக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு கொடுப்ப தற்காக பல்வேறு பகுதிகளி லிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் ஆங்காங் கே, பேருந்தை மடக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்திற்காக வந்த 120-க்கும் மேற்பட்டவர் களை காவல்துறை கைது செய்தனர். மேலும் காலை யில் கைது செய்யப்பட்ட முத் துக்குமாரை மாலை வரை எங்கு வைத்திருக்கிறோம் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை. பின்னர் 8 மணியளவில் முத்துக் குமார், சசி, ரவி ஆகிய மூவரையும் காவல்துறை ரிமாண்ட் செய்துள்ளது.
முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் : அ. சவுந்தரராசன்
சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்ட பின்னணியில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு ஒன்றினை வழங்கினார். பின்னர் காஞ்சிபுரம் பத்திரிகையாளர் அரங்கில் செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சித்ரவதைக்கு உள்ளாகும் தொழிலாளர்கள்!
சாம்சங் இந்தியா தொழிற்சாலை யில் கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு தொழிலாளர் உரிமை களுக்காக அமைக்கப்பட்ட சங்கத்தை கலைக்க வேண்டும் அல்லது கடுமையாக அதை உடைக்க வேண்டும் என்று நிர்வாகம் பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. தொழிலாளர்களை மிரட்டி இடமாற்றம், பணியிட மாற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்க்கும் தொழிலாளர்களை தனி அறையில் வைத்து கொடும் சித்ரவதை செய்கிறது. நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் சேர நிர்பந்திக்கின்றனர்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தமிழகத்தில், காஞ்சி புரத்தில் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு உரிமை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தவேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்கிறது நிர்வாகம். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. தொழிலாளர்களுக்காக போரா டிய இ. முத்துக்குமாரை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்தோம் என்கின்றனர் போலீசார். ஆனால் அவரை எங்கு வைத்துள்ள னர் என்று அவரது குடும்பத்திற்கே தெரியப்படுத்த மறுக்கின்றனர். தெரியப்படுத்தவும் இல்லை. இதெல் லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எந்த சட்டத்தையும் மதிக்க சாம்சங் தயாரில்லை!
8 மணி நேர வேலைச் சட்டத்தை மீறி, 11 மணி நேரம் வேலை செய்ய தொழிலாளர்களை நிர்வாகம் கட்டா யப்படுத்துகின்றது. ஆனால் அப்படி செய்தால் 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் நடைமுறைப்படுத்த தயாராக இல்லை. மொத்தத்தில் இது தொழி லாளர்களுக்கு எதிரான நட வடிக்கையாக இருப்பதால் சம்பந்தப் பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை கூட சந்தித்து நாங்கள் முறையிட உள் ளோம். தேவைப்பட்டால் இந்த விவ காரம் தொடர்பாக தமிழக முத லமைச்சரை கூட நாங்கள் நேரில் சந்தித்துப் பேசத் தயாராக உள் ளோம். அரசியல் கட்சி ஆதரவை யும் கூட நாங்கள் கோரஉள்ளோம்.
அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் சாம்சங் தொழிலாளர் களுக்கு ஆதரவாக இதர பகுதி தொழிலாளர்கள் ஆதரவு இயக்கத் தில் ஈடுபடவுள்ளனர். சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் காலையில் என்னிடம் தொலை பேசியில் பேசினார். சாம்சங் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய அளவில் சிஐடியு சங்கங்கள் சார்பில் இயக்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாககூறினார்.
பேசுவதற்குக் கூட மறுக்கும் நிர்வாகம்!
எனவே மாநில அரசு இப்பிரச்ச னையில் உடனடியாக தலையிட்டு சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு பெரும்பான்மை தொழிலாளர் விரும்பும் சங்கத்தை அங்கீகரித்து அவர்களிடம் பேச்சு நடத்த வேண்டும். உடனே எல்லா கோரிக்கைகளையும் ஏற்று கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. முதலில் பேசுவதற்கு வாருங்கள். கூட்டு பேர உரிமை என்ற அடிப்படையில் நாங்கள் வைக்கும் கோரிக்கையை பரிசீலியுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஆனால் அதற்கு நிர்வாகம் தயாராக இல்லை. பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய மாநில அரசும் தொழிலாளர் துறையும் அதை செய்ய மறுக்கின்றன.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சங்கர், விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கே. நேரு, சிஐடியு மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர், ‘சாம்சங்’ தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல் லன், சிஐடியு நிர்வாகி சிவப்பிர காசம் ஆகியோர் உடன்இருந்தனர்.