காஞ்சிபுரம், செப். 28 - தொழிற் சங்க உரி மைக்காக 20 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ‘சாம்சங்’ தொழிலா ளர்களுக்கு ஆதரவாக, அக்டோ பர் 1 அன்று தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்தை சிஐடியு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்கு வார் சத்திரம் பகுதியில் இயங்கி வரும் ‘சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் ஊதிய வஞ்சனையும், போனஸ் மற்றும் சலுகைகளில் காட்டிய அலட்சிய போக்கு, கடுமையான பணிச்சுமை, பதினோரு மணி நேர வேலை நேரம் போன்ற அடாவடித் தனங்களை தாங்க முடியாமல் தொழிற்சங்கம் அமைத்தனர். சட்டப்படி பதிவு செய்ய தொழிலாளர் துறை அதி காரியிடமும் விண்ணப்பித்தனர். ஆனால், தொழிலாளர் துறை அதிகாரி, திட்டமிட்டு காலதாம தம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சங்கத்தை பதிவு செய்யவில்லை. இதனால் வேறுவழியின்றி ஆயி ரக்கணக்கான ‘சாம்சங்’ தொழி லாளர்கள் 09.09.2024-லிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிமைக்காகப் போராடும் ‘சாம்சங்’ தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கங்களை சார்ந்த வர்களும், அரசியல் கட்சித் தலை வர்களும், ஜனநாயக அமைப்பு களை சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் தலை யிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த பல் வேறு ஜனநாயக வடிவங்களில் இயக்கங்கள் நடத்தப்பட்டும் சங்கத்தை பதிவு செய்யாமல் ‘சாம்சங்’ நிர்வாகத்திற்கு ஆதர வான நிலைபாட்டை தமிழ்நாடு அரசு எடுத்து வருவது ஏற்புடைய தல்ல.
மேலும், தொழிற்சங்கத் தலைவர்களையும், தொழிலா ளர்களையும் கைது செய்வது; தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜனநாயக ரீதியிலான போராட் டங்களுக்கு அனுமதி மறுப்பது, சென்னையில் அனைத்துச் சங்க தலைவர்களையும் கைது செய்வது போன்ற ஜனநாய கத்திற்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறை இறங்கி யுள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையா னது சங்கம் வைக்கும் உரிமை என்பது மட்டுமாகும். எனவே, 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வரும் இப்பிரச்சனையில் ‘சாம்சங்’ தொழிலாளர்களுக்கு ஆத ரவாக சிஐடியு சார்பில் 01.10.2024 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்து வது என்று முடிவு செய்துள்ளது.
இந்த தொழிற்சங்க உரிமைக்கான மறியல் போராட் டத்தில் சிஐடியு-வுடன் அனைத்து தொழில்வாரி சங்கங்க ளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ஜி. சுகுமாறன் குறிப்பிட்டுள்ளார்.