காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் மருத்துவ பூங்கா, தனியார் இருசக்கர வாகன தொழிற்சாலை என பல்வேறு இடங்களில் நிலை குழுவினர் பார்வையிட்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் , விஜயபாஸ்கர் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி , சிந்தனை செல்வம் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.