districts

img

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், ஆக 17 - காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், சிப்காட் நிறுவனத்தின் மூலம் தொழிற்சாலையில் பணிபுரி யும் பெண்களுக்காக ரூ.700 கோடி  மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட தங்கும் விடுதி வளாகத்தை சனிக் கிழமையன்று (ஆக.17) முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். 

இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன், திருபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏ செல்வபெருந்தகை  ஆட்சியர் கலைச்செல்வி, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிப்காட் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு தொழிற்சாலையின் ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் 20 ஏக்கர் நிலப்பரப் பில் ரூ.700 கோடி செலவில் கட்டப் பட்டுள்ளது. சுமார் 18,720 நபர்கள்  தங்கும் வகையில் 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக குடி யிருப்பாக கட்டப்பட்டுள்ளது. இந்த  குடியிருப்பில் உள்ள ஒரு தொகுதி யில் 240 அறைகள் உள்ளன. இதன் படி 13 தொகுதிகளில் மொத்தம் 3120  அறைகள் உள்ளன.

டார்மெட்ரி முறையில் ஒவ்வொரு அறையிலும் ஆறு பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி யின் முதல் தளத்தில் 4000 பேர்  அமரும் வகையில் உணவு அருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 1170  சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்  வளாகம் முழுவதும் பொருத்தப் பட்டுள்ளது.

அனைத்து அறைகளிலும் கொசு வலை வசதி செய்யப்பட்டுள்ளது.உள்ளரங்கம் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளுக்கான இடங்க ளும் தனித்தனியாக அமைக்கப்பட் டுள்ளது

மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவு  நீர் சுத்திகரிப்பு வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்கப் பட்டுள்ளது.