காஞ்சிபுரம், ஆக.3 – தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக 12 சங்க நிர்வாகிகளை கொரியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வல்லூர் கிராமத்தில் இயங்கிவரும் எஸ்எச்சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக 12 நிர்வாகிகளை பணி யிடை நீக்கம் செய்தது. அந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலி யுறுத்தி கடந்த ஜூன் 19 முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த தொய் வின்றி ஈடுபட்டு வருகின்ற னர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக சங்கத் தலை வர் இ.முத்துக்குமார் தலை மையில் தொழிலாளர்கள் 34 மணி நேரம் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட் டத்தை வெள்ளியன்று துவக்கினர். போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலை வர் டி. ஸ்ரீதர் மாவட்ட நிர்வாகி கள் அ.ஜெனிட்டன் எஸ் சீனு வாசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.நேரு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ஆனந்த், உழைக் கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பில் ஜீ.வசந்தா, எம்.கன்னிகா, டி.புவனேஸ்வரி, ஆர்.சௌந்தரி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கெடுத்து வாழ்த்திப் பேசினர்.
எஸ்.எச்.தொழிலாளர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாள் உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை (ஆக.3) போராட்டத்தை வாழ்த்தி சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் ஆர்.மது சூதனன், மாவட்ட குழு உறுப்பினர் சிவபிரகாசம், நகரக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரை யாற்றினார்.