districts

img

கள்ளக்குறிச்சி பாலியல் சுரண்டல் சம்பவம் காவல்துறையின் செயல்பாடு குறித்த பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்குவோம்!

தருமபுரி, செப்.19-  கள்ளக்குறிச்சியில் பெண்கள், குழந்தை களை கடத்தி பாலியல் சுரண்டல் செய்த சம்ப வத்தில் காவல்துறை மெத்தனமாக செயல் பட்டது என்றும் இச்சம்பவத்தில்  காவல்துறை யின் செயல்பாடு குறித்த பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்குவோம் என்றும் மாதர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலியல் சுரண்டல் சம்பவம் குறித்து உண்மை அறியும் குழுவின் அறிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் வெளியிட்டனர். இதில், மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செய லாளரும் முன்னாள் கேரள மாநில அமைச்சரு மான ஸ்ரீமதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீமதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பாஜக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் முறை அதிகரித்து வருகின்றன. பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பாஜக வின் ஆட்சியில் பெண்கள் மீதான சமூக மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆட்சியிலும் நிறைவேறவில்லை, பாஜக ஆட்சியிலும் நிறைவேறவில்லை. இந்த அரசு கார்ப்பரேட்களுக்கான அரசாக உள்ளது என்று தெரிவித்தார்.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா கூறுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்திருப்பது மிக  மோசமான சம்பவம். மாணவிகளை, இளம் பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தி ஈடுபட வைத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 16 பெண்களை மீட்டுள்ளனர். 17 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உரிய நேரத்தில் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க  வில்லை. பெண்கள், குழந்தைகள் மீதான  வன்முறை நடந்துவரும் சூழலில் கள்ளக்குறிச்சி சம்பவம் காவல்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் உண்மை  அறியும் குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நேரில் விசாரணை நடத்தினர். இந்த உண்மை அறியும் குழு வழக்க றிஞர் நிர்மலா ராணி தலைமையில் சமூக சேவ கர்கள், என்ஜிஓ கலந்துகொண்டனர். இந்த உண்மை அறியும் குழு அந்த மாவட்ட ஆட்சியர்,  போலீஸ் எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து சம்பவம் குறித்து கேட்ட றிந்தனர். இந்த குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

குறிப்பாக பெண்கள்‌, குழந்தைகள் மீதான  வன்முறை பாலியல் குற்றங்கள் நடக்கும் பொழுது காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எப்படி எல்லாம் காவல்துறை நடந்து கொள்ளக்கூடாது என்ற பரிந்துரைகளை இன்று சிறுபுத்தகமாக வெளி யிட்டுள்ளோம். இந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கும் அனுப்ப உள்ளோம். மேலும், இந்த அறிக்கையில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சமீபத்தில் அதிகரித்துள் ளது என்ற விபரத்தை குறிப்பிட்டுள்ளோம். பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்த அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் திட்டமிட்டுள்ளது. தரும புரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கருக்கலைப்பு, இளம்வயது திருமணம் அதிக அளவில் நடந்துவருகின்றன. இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்‌சங்கம் ஆய்வு நடத்தி தமிழக அரசுக்கு முடிவுகளை பரிந்துரைக்க உள்ளோம் என்று கூறினார். 

இந்த பேட்டியின்போது, அகில இந்திய துணைத்தலைவர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொருளாளர் ஜி.பிரமிளா, வழக்கறிஞர் நிர்மலா ராணி, தருமபுரி மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, பொருளாளர் எம்.வளர்மதி  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.