districts

img

உளுந்தூர்பேட்டை காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.9 - உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் குடியரசு மணியின் பூர்வீக நிலத்தை ரியல் எஸ்டேட் கும்பல் போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளதை சிபிஎம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து நியாயம் கேட்ட குடியரசு மணியின் மீது சென்னையைச் சேர்ந்த தனஞ்செழியன் தணிகைவேல் ரவி ஆகியோர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களை எஸ்சி, எஸ்டி வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும், குடியரசு மணியின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை திரும்பப்பெறவேண்டும், குடியரசு மணி உளுந்தூர்பேட்டை காவல் நிலை யத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படை யில் சம்பந்தப்பட்ட நில மோசடி செய்த வர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்,

சார்புநிலை எடுத்த உளுந்தூர்பேட்டை காவல் உயர் அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து உரையாற்றினார். மேலும் மாவட்ட செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், எம்.கே. பூவராகவன், எம்.செந்தில், இ.அலமேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ஆறு முகம், வி.சாமிநாதன், ஆர்.சீனிவாசன், டி.எஸ். மோகன்,ஏ.சக்தி,பி.சேகர், ஏ.தேவி, ஏ.ரீட்டா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.ரகு ராமன்,கே.ஆனந்தராஜ், பி.ஸ்டாலின், வேலா .பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.