districts

img

விழுப்புரத்தில் பாரம்பரிய உணவு திருவிழா

கள்ளக்குறிச்சி,செப். 12- பாரம்பரிய உணவு களை உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமார் வேண்டு கோள் விடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச் சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திரு விழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் துவக்கி வைத்து கண்காட்சியை பார்வை யிட்டார். பின்னர் ஆட்சியர் கூறு கையில், “ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணி கள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா தமிழ கம் முழுவதும் நடைபெற்று வருகிறது” என்றார். மக்கள் துரித உணவு களை உண்டு ஆரோக்கிய மின்றி வாழ்கிறார்கள். எனவே பொதுமக்கள். நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கண்காட்சியில் மாதிரி அங்கன்வாடி மையம், சமச்சீரான உணவு, நுண் ஊட்டச்சத்து உணவு கள், மூலிகை தாவரங் கள், காய்கறிகள், பழத் தோட்டங்கள், குழந்தை முதல் 1000 நாட்களின் முக்கி யத்துவம், குழந்தையின் வளர்ச்சி நிலைகள், குழந்தை மையங்களில் நடை பெறும் முன்பருவக் கல்வி, சமுதாய நிகழ்வுகள், சிறு தானியம் மற்றும் இணை உணவினால் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகியவை பொதுமக்கள், மாண வர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராஜ வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.