மயிலாடுதுறை, ஜன.10 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் தமிழர் திருநாளையொட்டி தமிழர்களின் பாரம்பரிய உணவு திருவிழா செவ்வாயன்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர் களால் தயாரிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் திறந்து வைத்து, தலைமை வகித்தார். கல்லூரியின் விலங்கி யல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவிற்கு 2022-23 கல்வி யாண்டில் ஓய்வு பெறக் கூடிய முதல்வர் மற்றும் பேராசி ரியர்கள், விலங்கியல் துறை தலைவர் முனைவர் கிறிஸ்டி பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு திருவிழாவில் மாப்பிள்ளை சம்பா, கேழ்வரகு, கம்பு, பயத்தம் பயறு பாயாசங்கள், கிழங்கு அடை கள், கூழ் வகைகள், கருவாட்டு குழம்பு, பல்வேறு தானி யங்களின் கஞ்சி, சுண்டல் வகைகள், பழைய சோறு, கொழுக்கட்டை வகைகள், சூப் வகைகள், தானியங்களின் கூட்டு பொரியல், மண்பாண்ட சமையல் வகைகள், புட்டு, ஆப்பம், இடியாப்பம், சீடை, பிரியாணி வகைகள் என 250-க்கும் மேற்பட்ட பலவகை உணவு பண்டங்களை காட்சிப் படுத்தியும், குறைந்த விலைக்கு விற்பனையும் செய்த னர்.
பார்வையாளர்களை கவர்ந்த
“பனை ஓலை கொழுக்கட்டை”
தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தில் ஒன்றிப்போன பனை மரத்தின் ஓலையினை வைத்து தயாரிக்கப்பட்ட பனை ஓலைக் கிழங்கு பார்வையாளர் களை வெகுவாய் கவர்ந்தது. மருத்துவ குணம் நிறைந்த பனை ஓலை கொழுக்கட்டையை அதிகளவில் வாங்கி ருசித்தனர். உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மறைந்து வரும் மற்றும் மறக்கப்பட்ட உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்து சென்றனர். இத்திருவிழாவையொட்டி ஆசிரியர்கள், மாண வர்களுக்கு பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டிகள் நடைபெற்றன.