கள்ளக்குறிச்சி, டிச.5 – கள்ளக்குறிச்சி மாவட் டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனி வாழை கிராமத்தைச் சேர்ந்த விஜய குமார், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெனிபர் என்ப வரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், ஜெனி பர் குடும்பத்தினர் இந்த காதலை கைவிடும்படி விஜய குமாரிடம் கூறியுள்ள னர். இந்த நிலையில் ஜெனிபரின் சகோதரர், விஜயகுமார் மற்றும் ஜெனி பரை சமாதானம் பேசுவதற் காக நெல்லை பாளையங் கோட்டையில் உள்ள அவ ரது வீட்டிற்கு அழைத்துள் ளார்.
அங்கு சென்ற விஜயகுமாரை, ஜெனிபரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் இரு வரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள் ளனர். இதையடுத்து, படு கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் உடல் நெல்லையில் இருந்து கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக் குறிச்சி மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.கே. பூவ ராகவன், ரிஷிவந்தியம் ஒன்றியச்செய லாளர் வை.பழனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், ரிஷி வந்தியம் கிளைச் செயலா ளர் ஐ.குருபாஷா ஆகியோர் விஜயகுமாரின் உடலுக்கு மாலை அணிவித்தனர். மேலும், அவரது குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறினர்.