கள்ளக்குறிச்சி ஆக 13- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட மாநாடு கடந்த 10. 11 தேதிகளில்
கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில் எஸ்.பழனி ராஜ் தலைமை தாங்கினார்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் செயல் தலைவர் ஏ.கோதண்டம் வரவேற்றார்.சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டு நிறைவில் திண்டி வனம் காந்தி சிலை அருகில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெற்றது. இதில் கிராமிய பாடல்கள்,தப்பாட்டம், ஒயி லாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கவிஞர் நந்தலாலாவின் உரை வீச்சு மற்றும் வேலூர் எல்ஐசி ஊழியர்கள் வழங்கிய நாடகம் ஆகியவை இடம் பெற்றன.
தீர்மானங்கள்
ஏழை எளிய மக்கள் செலுத்தும் எல்ஐசி பிரீமியம், மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், எல்ஐசி, ரயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்பனை செய்யக் கூடாது, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும், முயற்சிகளை கைவிட வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், அரசியலமைப்பின் விழுமியங்களை பாதுகாப்போம், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் பெண்களின் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதியநிர்வாகிகள்
மாநாட்டில் வேலூர் கோட்டத்தின் புதிய தலைவராக பி.எஸ்.பாலாஜி, செயலாளராக எஸ். பழனி ராஜ் பொருளாளராக சி.கணேசன் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். கோட்டம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.