districts

சென்னை முக்கிய செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய  ஐடிஐ மாணவன் உடல் மீட்பு

 கடலூர் மாவட்டத்திற்கு  புயல் நிவாரணப் பொருட்கள் கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பி வைப்பு

கடலூர், டிச.6- செம்மண்டலம் பகுதியில் உள்ள அரசு ஐடிஐ-யில் படிக்கும் நான்கு மாணவர்கள் நத்தப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள குளத்தில் குளித்துள்ளனர்.

 இதில் கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்த கதிர் காலில் தாமரை கொடி சுற்றியதை தொடர்ந்து அவர் தண்ணீரில் மூழ்கினார். சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.  இந்த நிலையில், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கி   தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய தேடுதல் பணி நடந்தும் மாணவன் கதிர் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை (டிச.6) தேடும் பணி துவங்கியது. சிறிது நேரத்தில், மாணவன் உடல் சேற்றில் சிக்கி இருப்பதை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர். பிறகு, உடலை கரைக்கு கொண்டுவந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிதம்பரம் அருகே மாற்றுத்திறனாளி  இளைஞர் மரணம், சாலை மறியல்

சிதம்பரம், டிச.6- சிதம்பரம் வட்டம், செங்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (38)  மாற்றுத்திறனாளி இவர், சிதம்பரத்தில் இருசக்கர வாகன பழுது நீக்கும் பணி செய்து வருகிறார்.  வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

வெள்ளிக்கிழமை (டிச.6) காலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். துணிசிரமேடு அருகே பள்ளி குப்பம் போகும் வழியில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சிதம்பரம்-நெடுஞ்சேரி சாலையில் ஒன்று திரண்ட பெற்றோர், உறவினர் மற்றும் சிபிஎம், விசிக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மோகன் மரணம் குறித்து உண்மையை கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், சதாசிவம், விசிக நிர்வாகிகள் ராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டனர்.

 கடலூர் மாவட்டத்திற்கு  புயல் நிவாரணப் பொருட்கள் கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பி வைப்பு

கள்ளக்குறிச்சி, டிச 6 – பெஞ்சல் புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அனுப்பி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல் வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களிலிருந்து நிவாரணப் உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ் குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி,உதவி இயக்குநர் ஊராட்சிகள் வெங்கட்ரமணன்,மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.