கள்ளக்குறிச்சி, டிச.10 - பெஞ்சால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு தவிச திருநாவலூர் ஒன்றிய செயலாளர் எம்.வி.ஏழுமலை, தலைவர் கே.அய்யனார் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் திருநாவலூர் ஒன்றியத்தில் பெஞ்சால் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவ சாய பெயர்களை விடுபடாமல் கணக்கெடுப்பு செய்யவேண்டும்,
சாகுபடி செலவுகளுக்கு ஏற்ப நெல், மரவள்ளி, மக்காச்சோளம், மணிலா ஆகிய பயிர்க ளுக்கு ரூ.35ஆயிரமும்,உளுந்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.5ஆயிரம் நிவாரணமாக வழங்கவேண்டும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் முந்திரி மரங்களுக்கு இழப்பீடாக ஹெக்டார் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரமும்,மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டார் ஒன்றுக்கு ரூ.25ஆயிரமும் வழங்க வேண்டும்,
எருது,பசு,ஆடு மற்றும் கோழிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கை களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்டம் முழுவதிலும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர். இதன் ஒரு பகுதியாக உளுந்தூர் பேட்டை வட்டாட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை விளக்கி தவிச மாவட்ட தலைவர் டி. ஏழு மலை, செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர்எஸ்.ஜோதிராமன்,ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.ஆரோக்கியதாஸ், ஏ.குடியரசு மணி, டி. சிவக்குமார், ஆர்.முருகதாஸ், எஸ்.சிவகண்டன், பி.பன்னீர்செல்வம், ஆர்.கோவிந்தன், எம்.அஞ்சாபுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.