districts

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி, ஜன. 13- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு வதாக மாவட்ட ஆட்சியர்  ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களை தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலம், ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலமாக மாதம் 18 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் வரும் 25ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவங்களை ஆட்சியரக இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி 606213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.