கள்ளக்குறிச்சி, மே 19- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் சார்ரபில் மே 26,27 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் மே 18 அன்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி எம். ஜெய்சங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்பாவு நிர்வாகக்குழு உறுப்பினர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)லிபரேஷன் நகரச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட துணை செயலா ளர் கே.அறிவுக்கரசு உள்ளிட்டோர் பங்கே ற்றனர். மே 26 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, வாணாபுரம் கூட்டுசாலை ஆகிய இடங்களிலும், மே 27ஆந்தேதி சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், வெள்ளிமலை ஆகிய இடங்களிலும் கூட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் மே 25 முதல் 31 வரை கச்சராபாளையம், எலவனாசூர் கோட்டை, களமருதூர், கெடிலம், எம்.குன்னத்தூர், சேந்தநாடு, அரசம்பட்டு, ரிஷிவந்தியம், ஜி.அரியூர், எறையூர், பிள்ளையார் குப்பம், தியாகதுருகம், நைனார்பாளையம் ஆகிய 13 மையங்களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.