கள்ளக்குறிச்சி, ஆக.20- கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள டாக்டர் ஆர். கே.எஸ். தனியார் கல்லூரி யில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘கல்லூரி சந்தை’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.
அப்போது உரை யாற்றிய ஆட்சியர், “கல்லூரி சந்தை நிகழ்ச்சி யின் நோக்கம் பெண்க ளின் வாழ்வின் முன்னே ற்றம் கொண்டு வருவ தாகும்”என்றார்.
ஒரு குடும்பத்தின் அவசர தேவைகளுக்காக அருகில் உள்ள நபரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அரசின் சார்பில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்பட்டு அவசர தேவைகள் நிறைவு செய்யப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கல்லூரி முதல்வர் மோகன சுந்தர், துணை முதல்வர் ஜான் விக்டர் மற்றும் கல்லூரி மாணவ மாணவி கள்,மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.