districts

img

பிறந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு மருத்துவர் மீது வாலிபர் சங்கம் புகார்

சிதம்பரம், ஆக 12- சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்ட தற்கு மருத்துவரின் கவனக்குறைவே காரணம் என்று வாலிபர் சங்கம் புகார் செய்துள்ளது. சிதம்பரம் அருகே கே. ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த வர் பாரதிராஜா. இவரது மனைவி அருள்மொழி. சிதம் பரம் அரசு மருத்துவமனை யில் பிரசவத்திற்காக அனு மதிக்கப்பட்டார். இம்மாதம் 8ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் இடது கால் வீக்கமாக இருந்தது இதுகுறித்து மருத்துவர்களி டம் கேட்டவுடன் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த போது குழந்தையின் கால் எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது தெரியவந்தது. பின்னர் அக்குழந்தையின் எலும்பில் முறிவுக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பரங்கிப் பேட்டை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் ஜோதி தலைமையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் அவ ரது உறவினர்கள் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவியை சந்தித்த னர். அப்போது, குழந்தை யின் காலில் எலும்பு முறிவுக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே என்றும் இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தலைமை மருத்து வர் ரவி,“அறுவை சிகிச்சை யின்போது ஆபத்தான முறையில் குழந்தையை வெளியில் எடுத்தபோது எதிர்பாராத விதமாக இது நடந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம்” என்றார்.