districts

img

நடராஜர் கோவிலை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனிச்சட்டம்: விசாரணை குழுவிடம் வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 21- சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தனி சட்டம் இயற்ற வேண்டும் என விசாரணை குழுவிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரி விக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.  இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அடங்கிய அக்குழுவிடம் திங்க ளன்று (ஜூன் 20) ஒரு நாள் மட்டுமே 4,101 மனு கொடுத்தனர். செவ்வாயன்றும் ஆயிரக்கணக்கான மனுக்கள் அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமையில் அளித்த மனுவின் விவவரம் வருமாறு:- காசி விஸ்வநாதர் ஆலயத்தை அரசே ஏற்று நடத்தியது போல சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசே ஏற்று நடத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ கத்தின் பிற கோவில்களில் உள்ளது போல் உண்டியல் வைத்து காணிக்கை பெற வேண்டும். அனைத்து விதமான பூசை, அர்ச்ச னைகளுக்கும் உரிய ரசீது வழங்க வேண்டும். சிற்றம்பல மேடையில் நின்று நடராசனை தரிசிக்க கட்டணம் வசூ லிக்க கூடாது, ஒவ்வொரு சன்னதி யிலும் பூசை செய்யும் தீட்சித அர்ச்ச கர்கள் பெயரை கோவில் அலுவலக வளாகத்தில் ஒட்ட வேண்டும், பிற கோவில்களில் உள்ளது போல் அங்கீகரிக்கபட்ட தரமான பிரசாத கடைகள் அமைக்க வேண்டும். நடராசர் கோவிலுக்கு சொந்த மான நகைகள் பட்டியல், நிலங்கள் உள்ளிட்ட சொத்து விப ரங்களை அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளை கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவும் உரிய அலுவலரின் பெயர், போன் நம்பரை பக்தர்களுக்கு தெரி விக்க வேண்டும். கோவிலில் பணி புரியும் தீட்சிதர்களுக்கு அவரவர் வேலைகளுக்கு ஏற்ப மாதம் ஊதியம், சட்டப்படியான பணப்பலன்கள் வழங்க வேண்டும். தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூசையின் போதும் தேவார திருமுறைகளை பாடும் வகையில் ஊதியம் கொடுத்து ஓது வார்களை பணியமர்த்த வேண்டும். பரம்பரை வாரிசுரிமை பணி நிய மனம் சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அதேபோல் சிதம்பரம் கோவிலும் பரம்பரையாக தீட்சி தர்களின் நியமனம் ஒழிக்க வேண்டும்.  அனைத்து சாதியினரையும் நடராசர் கோவிலில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும். நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள தீட்சிதர்கள் கோவில் பூசை நிர்வாகத்திலிருந்து உடனடியாக தடுக்கப்பட வேண்டும். கோவிலில் இதுவரை நிர்வாகம் செய்துவந்த தீட்சிதர்களால் ஏற்பட்ட வருமான இழப்பு, சொத்துக்கள் இழப்பு, பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய பெரும் செல்வந்தர்கள் குறித்தும் அதன் வரவு செலவு குறித்தும் நீதி விசா ரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன்,  வி.சுப்பராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், கடலூர் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, சிதம்பரம் நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன், கடலூர் ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா, ஆளவந்தார் ஆகி யோரும் தனித்தனியாக மனு அளித்தனர்.