districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 24வது மாநாடு பெண்ணாடத்தில் செங்கொடி பேரணியுடன் தொடங்கியது

கடலூர், டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 24 வது மாநாடு பெண்ணா டத்தில் செங்கொடி பேரணி யுடன் சனிக்கிழமை (டிச.14)  தொடங்கியது. 

பெண்ணாடம் பேருந்து நிலையத்திலிருந்து துவங் கிய பேரணியில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்ட னர். 

தியாகச்சுடர்கள் 

 பின்னர் மாநாட்டு அரங்கில் தியாகிகள் நினை வாக கொண்டுவரப்பட்ட சுட ர்கள் பெறும் நிகழ்ச்சி நடை பேற்றது. நெல்லிக்குப் பத்தில் இருந்து சி. கோவிந் தராஜன்- ஷாஜாதி நினை வாக கொண்டுவரப்பட்ட சுடரை சிவகாமி பெற்றுக் கொண்டார். விருத்தா சலத்தில் இருந்து என். ஆர்.ராமசாமி நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை வி.முத்துவேல் பெற்றுக் கொண்டார். சிதம்பரத்தி லிருந்து டி.ஆர். விஸ்வநா தன் நினைவாக கொண்டு வரப்பட்ட சுடரை பி.கற்ப னைச் செல்வம் பெற்றுக் கொண்டார். நெய்வேலியில் இருந்து எம்.ரத்தினசபாபதி நினைவாக கொண்டுவரப் பட்ட சுடரை  பி.எஸ்.மகாலிங் கம் பெற்றுக் கொண்டார். பண்ருட்டியில் இருந்து எஸ்.துரைராஜ் நினைவாக கொண்டுவரப்பட்ட சுடரை  நடராஜன் பெற்றுக் கொண் டார். கடலூரில் இருந்து குமார் - ஆனந்த் நினைவாக கொண்டுவரப்பட்ட சுட ரினை ஜெயசித்ரா பெற்றுக் கொண்டார். 

கொடியேற்றம்

வடலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடியினை மூத்த தோழர் மூசா பெற்றுக் கொண்டார். பின்னர் மாநாட்டு அரங்க வளாகத் தில் விண்ணதிர முழக்கங்க ளுக்கு இடையே செங் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் ஏற்றி வைத்தார். 

பொது மாநாடு

பெண்ணாடம் என்.சங்க ரய்யா நினைவரங்கத்தில் (சரோ ரத்னா திருமண மாளி கையில்) தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பொது மாநாடு தொடங்கி யது. மாநாட்டிற்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். 

அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம். மருதவாணன் முன் மொழிந்தார். செயற்குழு உறுப்பினர் ஜி. ஆர். ரவிச்சந் திரன் வரவேற்புரை நிகழ்த்தி னார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட அரசி யல் சாசன அறிக்கையினை யும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ராஜேஷ் கண்ணன் நிதிநிலை அறிக் கையினையும் சமர்ப்பித்து பேசினார்கள். 

போராட்ட களங்கண்ட  மாவட்டம்

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தனது துவக்க உரையில்,  உலக நிலைமை முதற்கொண்டு, உள்ளூர் சூழ்நிலை வரை வாதிக்கின்ற மாநாடாக மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு அமைந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரா கவும், அடிதட்டு மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை களை எதிர்த்தும், விவசாயி கள் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காகவும் எண்ணற்ற போராட்டங் களை நடத்தி உள்ளது என்றார்.

 பெண்களின் உரிமை களை பாதுகாக்கவும், பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராகவும் வலுவான போராட்ட களம் கண்டுள்ளோம்.சிதம்பரம் அண்ணா மலை  பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்தின் காரண மாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏராளமான தலைவர்கள் வந்தனர்.  ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் அண்ணாமலைப் பல்கலை க்கழகத்தில் நடைபெற்றுள் ளது. இந்தப் போரா ட்டத்தில் கம்யூனிஸ்டு களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 

இளைஞர்களை திரட்டுக

இளைஞர்கள் இல்லா மல் அடுத்த தலைமுறையை கட்டமைக்க முடியாது. எனவே இளைஞர்களை பெருமளவில் அணி திரட்ட வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனை களையும் எதிர்கொள்ளும் ஒரே இயக்கம் செங்கொடி இயக்கம் தான். கடந்தகால அனுபவங்களை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் வலிமைமிக்க கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவோம் என்று கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.