கடலூர், டிச.8- கடலூரில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் புயல் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. சமீபத்திய பெஞ்சல் புயல்- மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்ட கடலூர் நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு வேலூர் கோட்ட எல்ஐசி ஊழியர் சங்கம், வேலூர் கோட்ட எல்ஐசி பென்ஷ னர்கள் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் துணைத் தலைவர் வைத்தி லிங்கம், பென்சனர் சங்கத்தின் வேலூர் கோட்ட செயலாளர் சுகுமா ரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. கடலூர் எல்ஐசி கிளை மேலாளர் தேவராஜ், கடலூர் நகர அனைத்து குடி யிருப்போர் சங்கத் தின் சிறப்பு தலைவர் மருதுவா ணன், பண்ருட்டி கிளை சங்கத் தலை வர் கே.பி.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர் கிளைச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராஜு, நித்யா மற்றும் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு போர்வை, அரிசி, மஞ்சள் தூள், பேஸ்ட், பிஸ்கட் அடங்கிய நிவாரணத் தொகுப்பு, 150 குடும்பங் களுக்கு வழங்கப்பட்டது.