districts

img

பாசனத்திற்கு வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு

சிதம்பம், செப் 19- மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார்.  இந்த தண்ணீர் கல்லணை வழி யாக கீழணையை வந்த டைந்தது.  கீழ அணையில் இருந்து வடவார் மூலம் வீரா ணம் ஏரியில் தண்ணீரை படிப்படியாக தேக்கி வைத்து வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடி தேக்கி வைக்கப்பட்டது.  இது 1465 மில்லியன் கண்ணாடி ஆகும். இதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை மாலை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பாசனத்திற்காக ராதா மதகு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டார்.  இதனை தொடர்ந்து வீரணம் ஏரியில் உள்ள 34 மதகு கள் வழியாகவும் பிரதான வாய்க்கால்களில் 45 கன அடி வினாடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஏரியை சுற்றியுள்ள நத்தமலை, கந்தகுமாரன், உத்தமசோழன், முகையூர் மற்றும் சேதியூர் உள்ளிட்ட 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய பயன்படு வதுடன் நிலத்தடி நீர் உயர வும் விவசாயம் செழித்து மக்களின் வாழ்வாதாரம் உய ரும்.

இதனைத் தொடர்ந்து வீரணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் 72 கன அடி குடிநீருக்கு வழங்கப்பட்டு வருகிறது.  முன்னதாக கீழணையில் இருந்து பாசனத்திற்கு  வடவாறு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 2200 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்கால் 750 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 650 கன அடி,  கும்கி மன்னியார்  150 கனஅடி, மேலராமன் வாய்க்கால் வழியாக 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கடலூர், தஞ்சை,  அரியலூர், மயிலாடுதுறைஆகிய மாவட்டங்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர்பாசனம் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மாவட்ட வரு வாய் அலுவலர் பொறுப்பு கிருஷ்ணன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன். மயி லாடுதுறை எம்பி ராம லிங்கம், சிதம்பரம் நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற் பொறியாளர்கள் அணைக் கரை குமார், சிதம்பரம் ஞான சேகர், ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்க நாயகி, கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்ட மைப்பு தலைவர் ரவீந்திரன்உள்ளிட்ட பாசன சங்கத் தலைவர்கள்.