districts

img

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 20- அனல் மின் நிலையம் 2 விரிவாக்கத்தில் வேலை செய்யும் அனைத்து தொழி லாளர்களையும் முன்னு ரிமை பட்டியலில் இணைத்து மருத்துவ புத்த கம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி என்எல்சி பொது ஒப்பந்த தொழிலாளர் ஊழி யர் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொருளாளர் என்.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் பொதுச் செயலாளர் த.அமிர்தலிங்கம் பேசினார். தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் பணி வழங்க வேண்டும், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் காண்ட்ராக்ட் ஊதியமாற்று ஒப்பந்தத்தின் அடிப்படை யில் புதிய ஊதியம், அக விலைப்படி வழங்க வேண்டும், அனைவருக்கும் சீருடை வழங்க வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.