திருவள்ளூர், மார்ச் 30- அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலா ளர்கள் புதனன்று (மார்ச் 30) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட சென்னை அனல் மின் நிலை யத்தில், நிலக்கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, பராமரிப்பு பிரிவு, மின் உற்பத்தி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை ஒப்பந்த தொழிலா ளர்கள் என்று கூட அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாக வகைப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 600ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு விதியிருந்தும் அதனை பின்பற்றாமல் 300ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், ஒப்பந்த தொழிலாளர்களை அடை யாளப்படுத்தும் வகையில் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும், பண்டிகை காலங்களில் போனஸ் வழங்க வேண்டும், பணி நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும், விபத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.