districts

img

கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரழிவுகளும் தீர்வுகளும்-கோ.மாதவன்  

கடலூர் மாவட்டம் தொடர்ந்து மழை, வெள்ளம், புயல், சுனாமி, வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகளால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்ட மாக உள்ளது. இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏழு, எட்டு மாவட்டங்களின் வடிகால் பகுதி யாக இது அமைந்துள்ளது. கர்நாடகாவில் பெய்யும் மழை நீர் சாத்தனூர் அணை வழியாக கடலூருக்கு வருகிறது. அதேபோல, கோமுகி அணையிலிருந்து மணிமுத்தாறுக்கும், கல்லணையி லிருந்து கொள்ளிடத்திற்கும் தண்ணீர் வந்து, கடலூர் மாவட்டத்தின் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.

நதிகளின் பாதுகாப்பு அவசியம்

தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகியவற்றின் கரை களை பலப்படுத்த வேண்டியது அவசியம். நீர்மட்டத்தை உயர்த்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

2021 வெள்ளப் பேரழிவு

2021 நவம்பர் 19 அன்று சாத்தனூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர் மாநகரத்தை முற்றிலும் சூழ்ந்து, வெள்ளக்காடாக மாற்றி யது. ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து, மின்னணு பொருட்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

2023 டிசம்பர் வெள்ளம்

தென்பெண்ணை ஆற்றுக் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கை கள் இருந்தும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், 2023 டிசம்பர் 2 அன்று முன்னறி விப்பின்றி திறக்கப்பட்ட சாத்த னூர் அணையின் தண்ணீர் மீண்டும் கடலூரை வெள்ளக் காடாக்கியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அவசர கோரிக்கைகள்

1.சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள்

2. பொருட்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்

3.வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம்

4. வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம்

5.பயிர் பாதிப்பு மற்றும் கால்நடை இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம்

6. நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை பெண்ணையாற்றில் காங்கிரீட் சுவர்

நீண்டகால தீர்வுகள்

1. அருவாமுக்கு திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல்
2. வீராணம், வெலிங்டன், பெருமாள், வாலாஜா ஏரிகளை முழுமையாக தூர்வாருதல்
3.கடலூர் இயற்கை துறைமுகத்தை ஆழப்படுத்தி விரிவுபடுத்துதல்
4.சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து
வீட்டுவசதி மேம்பாடு
1. கடலூரை குடிசை இல்லா மாவட்டமாக மாற்றுதல்
2. ரூ.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் திட்டம்
3.கலைஞர் வீட்டுத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவு படுத்துதல்
4. மனை பட்டா வழங்குதல்
5. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு மாற்று இடம்

விவசாய பாதுகாப்பு

1. பொதுத்துறை பயிர் காப்பீட்டு நிறுவனம் அமைத்தல்
2. தனியார் நிறுவனங்களை பயிர் காப்பீட்டில் இருந்து விலக்குதல்

வரலாற்றுச் சிறப்பு

கடலூர் மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தை முன்னெ டுத்த தவப்புதல்வர்கள் எஸ்.நடராஜன், சி.கோவிந்தராஜன், என்.ஆர்.ராமசாமி, ஷாஜாஜி கோவிந்தராஜன், டி.ஆர்.விஸ்வ நாதன், எம்.ரத்தினசபாபதி, எஸ்.துரைராஜ் உள்ளிட்ட தியாகத் தலைவர்கள் களப்போராட்டங்கள் நடத்தி உருவாக்கிய பெருமைமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தகைய பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்க எப்போதும் களத்தில் நின்ற மகத்தான இயக்கம்.

அழைப்பு

தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் உரிமைகளுக்காக அயராது போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு டிசம்பர் 13 முதல் 15 வரை பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. டிசம்பர் 13 அன்று நடைபெறும் செங்கொடி பேரணிக்கு அனைத்துப் பகுதி மக்களும் கலந்துகொண்டு ஆதரவு நல்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கோ.மாதவன்  
கடலூர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)