கடலூர், மார்ச் 8- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றி கரமாக்க மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத கொள்கை களை கண்டித்தும், தொழி லாளர் சட்டத் தொகுப்பு களை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலி யுறுத்தியும் பொதுத் துறை நிறுவன பங்கு களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் மார்ச் 28, 29 தேதி களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தை கட லூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் டி.பழனி வேல் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், ஐஎன்டியூசி மாவட்ட கவுன்சில் தலைவர் மனோ கரன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் குளோப், தொமுச மாவட்ட துணைத்தலைவர் எத்திராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, ஆளவந்தார், பாபு, திருமுருகன், சுப்புராயன், சாவித்திரி, ஸ்டாலின் மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஏஐடியூசி மாவட்டப் பொருளாளர் சுந்தர்ராஜா, கட்டுமான சங்க நிர்வாகி கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி மார்ச் மாதம் 20 ஆம் தேதி யிலிருந்து 25 ஆம் தேதி வரை ஆலைகள் தோறும் வாயிற் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை கடலூர் மாவட்டத்தில் என்எல்சி, மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்து, கூட்டுறவுத் துறை, நுகர்பொருள், சிப்காட் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் முழுமையாக நடத்துவது என்றும் ஆட்டோ, டாக்சி, வேன் தனியார் பேருந்து உள்ளிட்ட சாலை போக்குவரத்தை இயக்காமல் நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.