districts

img

தொழிலாளர் போராட்டங்களும் சிஐடியுவின் பங்களிப்பும்

கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு, குறைந்தபட்சக் கூலி, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பஞ்சப்படி, போனஸ், இஎஸ்ஐ போன்ற அடிப்படை உரிமைகளுக்காக சிஐடியு தொடர்ந்து போராடி தொழிலாளர்களைப் பாதுகாத்து வருகிறது.

என்எல்சி போராட்டங்களும் வெற்றிகளும் 1989-ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வைத்தது 1990-ல் இன்கோசர்வ் சொசைட்டி ஏற்படுத்தப்பட்டு 5,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தற்போதைய நிலை சிஐடியு அங்கீகார சங்கமாக இருந்தபோது வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு ஒப்பந்தம். 2020 ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் பணி நிரந்தர உறுதி.  1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம். மீதமுள்ள தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதற்கான போராட்டங்கள் தொடர்கின் றன.

சிப்காட் தொழிற்பேட்டை போராட்டங்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் ஒப்பந்த தொழிலாளர்கள், குறிப்பிட்ட கால தொழிலாளர்கள், கேஷுவல் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த சட்டப் போராட்டங்கள் நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துள்ளது. பொதுத்துறை பாதுகாப்புப் போராட்டங்கள்  என்எல்சி தனியார்  மயமாக்கல் எதிர்ப்பு, 2002: வாஜ்பாய் அரசின் 49 விழுக்காடு  பங்கு விற்பனை முயற்சி தடுப்பு, 2006: மன்மோகன் அரசின் 10% பங்கு விற்பனை முயற்சி தடுப்பு தற்போது:

மோடி அரசின் பங்கு விற்பனை முயற்சிகளை எதிர்த்து தொடர் போராட்டங்கள். மாநில பொதுத்துறை பாதுகாப்பு  மின்சார வாரியத்  தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போக்குவரத்து துறை தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, ஒப்பந்த முறை நியமன எதிர்ப்பு, கட்டு மானத் தொழிலாளர் பிரச்சனைகள்  தற்போதைய நெருக்கடிகள் மணல் குவாரி இல்லாததால் 5,000-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் பாதிப்பு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலையின்மை. கோரிக்கைகள் மாட்டுவண்டிகளுக்குத் தனிமணல் குவாரி, கட்டுமானப் பொருட்களின் விலைக் குறைப்பு, நலவாரியப் பிரச்சினைகள் ஆன்லைன் பதிவு எளிமைப்படுத்தல், கிராம நிர்வாக அலுவலர் சரிபார்ப்பு ரத்து, பணப்பயன்கள் உயர்வு மற்றும் தாமதமின்றி வழங்கல், ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்வு தீபாவளி, பொங்கல் தொகுப்பு வழங்கல் நலவாரிய அலுவலக முறைகேடுகள் அகற்றல் மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்கள் தொழிலாளர்களின் கோரிக்கை களுக்காக தொடர்ச்சியான போராட்டங் களை நடத்தி, அமைப்பாகத் திரட்டி, வழி காட்டி, களத்தில் இறங்கி போராடி வரு கிறது சிபிஎம்.உழைக்கும் மக்களின் உரிமைக்காக அனுதினம் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு டிசம்பர் 13 முதல் 15 வரை பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. மாநாடு வெற்றிபெற டிசம்பர் 13 அன்று நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.