கடலூர், டிச.9- பெஞ்சால் புயல் மற்றும் மழை, தென்பெண்ணை ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய குழு பார்வையிட்டது. கடந்த ஞாயிறன்று கடலூர் மாவட்டத்தில் குட்டியாங்குப்பம், தூக்கணாம்பாக்கம், மேல்அழிஞ்சிப்பட்டு, கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாண மேடு, கண்டக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்கள், நிலங்களில் உள்ள பாதிப்பு களின் நிலமைகளை பார்வையிட்டு விவ சாயிகளிடம் கேட்டறிந்து, ஆறுதலைத் தெரிவித்தனர். இந்த குழுவில் சங்கத்தின் அகில இந்திய நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத், அகில இந்திய இணைச் செயலாளர்கள் சாகர், டி.ரவீந்திரன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட நிர்வாகி கள் ஆர்.கே.சரவணன், ஜி.ஆர்.ரவிச் சந்திரன், எஸ்.தட்சிணாமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் வினோத்குமார், மாநகர குழு தமிழ்மணி, தவிச குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகி ஜி.வெங்கடேசன், கடலூர் ஒன்றிய தலைவர் எம்.கடவுள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 5 லட்சம் நிதியுதவி விவசாயிகள் சங்க அகில இந்திய குழு தமிழ்நாடு வெள்ள பாதிப்பிற்கு முதல் தவணையாக ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக அகில இந்திய நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் தெரி வித்தார்.