districts

img

கடலூர் மாவட்ட பேரழிவு: ஒன்றிய குழு ஆய்வு

நெய்வேலி, டிச.8-
கடலூர் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் காரணமாக தென்பெண்ணையாற்றில் உரு வான வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய  பேரிடர் மேலாண்மைத்துறை இணைச் செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை ஒன்றிய குழுவினர் ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

பெஞ்சால் கனமழை காரண மாக ஏற்பட்ட வெள்ளத்துடன் சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் சேர்ந்ததால்,  கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டோடியது.

கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு கரை யோரப் பகுதிகளில் இருந்த கிரா மங்கள் மற்றும் நகர் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தன. பொது மக்கள் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். வீடு களினுள் சகதி கலந்த வெள்ள நீர் புகுந்ததால் துணி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. சாலை கள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புயல் சேதங்களை சரி செய்ய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டார். அதன்பேரில்,  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில்,  ஒன்றிய  அரசின்  வேளாண்  துறை  இயக்குநர்  கே.பொன்னுசாமி, மத்திய  நிதித்துறை  செலவினப் பிரிவு  இயக்குநர்  சோனாமணி  ஹெளபம்,  ஒன்றிய  நீர்வளத்துறை  இயக்குநர்  ஆர்.சரவணன்,  மத்திய  சாலைப் போக்குவரத்து  மற்றும்  நெடுஞ்சாலைத்துறை  முன்னாள் பொறியாளர்  தனபாலன் குமார், மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச் கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புகளை சனிக்கிழமை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, இரண்டாவது நாளாக ஞாயிறன்று  (டிச.8)  கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பு களை பார்வையிட்டு ஆய்வு செய்த னர். பண்ருட்டி வட்டம்,  பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கத்தில்  தென்பெண்ணை  ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து  சேதம் அடைந்ததையும், கரையினை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், மேல்பட்டாம் பாக்கத்தில் சுங்கச் சாலையில் ஏற்பட்ட மண் அரிப்பு மற்றும் அதனை சரி செய்ய மணல் மூட்டை கள் அடுக்கி சாலை சீரமைக்கும் பணிகளையும், கடலூர் வட்டம் அழகியநத்தம்  மற்றும் இரண்டா யிரம் விளாகம் சாலை யில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதை யும், அங்கு தற்காலிகமாக பாலம் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அழகியநத்தத்தில் வேளாண் பயிர், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதையும், விவ சாயிகளிடம் பயிர்சேதம் குறித்தும், கணக்கெடுப்பு மற்றும் நிவா ரணம் வழங்குதல் குறித்தும் கேட்டறிந்தனர்.  அப்போது , விவ சாயிகள்  சேதம்  அடைந்த  நெல்  பயிரை காட்டி  நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்தனர். விவசாய நிலப்பரப்பில் மணல் குவியல்கள் ஏற்பட்டுள்ளதையும், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவ தனையும், பயிர்சேதம் குறித்து அமைக்கப்பட்ட  புகைப்பட விளக்க காட்சியினை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். நாண மேட்டில் வெள்ளம் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டதையும், நீர்வள ஆதாரத்துறை மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரிசெய்யும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குண்டுஉப்பலவாடியில் மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டினையும், ஆற்றங்கரை பகுதி யில் உள்ள வீடு மழை  வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள தையும், கண்டக்காட்டில் பெரு வெள்ளத்தின் காரணமாக பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் சேதமடைந்துள்ளதையும், அப்பகுதியில்   நடந்த சாலை சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

ஒன்றிய குழுவினருக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் பேடி, வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க.நந்தகுமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் த.மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் தேசங்களை விளக்கினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரியுடன் வெள்ள புயல் பாதிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.