சிதம்பரம், ஜூன் 13 - சிதம்பரம் மேல வீதியில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இங்கு வாகனங்கள் நிறுத்து வதற்கு போதிய இடம் இல்லாததாலும், போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவ தாலும் காய்கறி சந்தையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் சிதம்பரம் நகரம் 4ஆவது வார்டுக்குட்பட்ட வடக்கு மெயின்ரோடு உழவர் சந்தையில், புதிய காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளது. இதன்படி, ரூ. 5.77 கோடி மதிப்பீட்டில் 125 கடைகள் கட்டப்படுகிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதியுடன் இந்த காய்கறி சந்தை அமைய உள்ளது. இதையடுத்து சிதம் பரம் நகர்மன்ற தலை வர் செந்தில்குமார் திங்கட்கிழ மையன்று (ஜூன் 13) உழவர் சந்தையில், காய்கறி சந்தை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதில் நகர் மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீனா, பொறியாளர் மகா ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.