ஓசூர்,நவ.7- அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க ஓசூர் ஒன்றியகுழு பேரவை கே.எம். ஹரிபட் நினை வகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி,தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி, மாநகரச் செயலாளர் சி.பி.ஜெய ராமன், எஸ்.ஆர்.ெஜயராமன், சேது மாதவன், முத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பளவணப்பள்ளி, சூடுகொண்ட பள்ளி பகுதிகளில் 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பாழடைந்துள் ளதால் இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், 60 வயது கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக நாராயணசாமி, செயலாளராக நாராயணமூர்த்தி, பொருளாளராக திம்மராயன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.