ஈரோடு, டிச. 17- அனைத்து தகுதி இருந்தாலும் வார்டு உறுப்பினராக இருப்பாதல் அர சின் வீட்டு மனை வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தை யெடுத்து, பாதிக்கப்பட்ட நசியனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திற்குட்பட்டது நசி யனூர் பேரூராட்சியில் 14 ஆவது வார்டு உறுப்பினராக சி.பி.தங்கவேல் இருந்து வருகிறார்.
இவர் மார்க்சிஸ்ட் கட்சி சார் பாக போட்டியிட்டு இரண்டு முறை இப் பகுதி மக்களால் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சிக்கே உரித்தான எளிமையும், நேர் மையும் கொண்ட இவர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சொந்த இருப்பிடம் இல்லா மல் தனது சித்தி வீட்டில் வசித்து வரு கிறார். இந்நிலையில், நசியனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட மேற்கு புதூரில் வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்று வருகிறது. இதனை யறிந்து, கிராம நிர்வாக அதிகாரியை அணுகி, தனக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லாத நிலையில், தனக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என விண்ணப் பம் அளித்துள்ளார்.
ஆனால் விண்ணப் பத்தை ஏற்க மறுத்த கிராம நிர்வாக அலு வலர், வார்டு உறுப்பினருக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க முடியாது எனத்தெரிவித்துள்ளார். இதையடுத்து, வார்டு உறுப்பினர் சி.பி.தங்கவேல் தனக்கு தகுதி இருந் தும் வீட்டுமனை விண்ணப்பத்தை கூட ஏற்க மறுப்பது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தார். அப்போது தனது வறுமை நிலையை கணக்கில் கொண்டு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என ஆட்சியரி டம் தெரிவித்தார். அப்போது மார்க் சிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலா ளர் எம்.பாலசுப்பிரமணி உடனிருந்த னர்.