districts

img

மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி அடிப்படை வசதிகளின்றி ஏங்கும் அவலம்

- எஸ்.சக்திவேல் - ஈரோடு, டிச. 10- மாநாகராட்சியுடன் இணைந்த ஊராட்சி வார்டுகளில் வரி உயர்வு சுமை தான் வந்ததே தவிர, அடிப்படை வசதி கள் கூட செய்துதரப்படவில்லை என கொந்தளிக்கின்றனர் திண்டல் ஊராட்சி 1 ஆவது வார்டு பொதுமக்கள். ஈரோடு மாநகராட்சியின் 30ஆவது வார்டிற்குட்பட்டது காரப்பாறை, புதுக் காலனி, சின்னமேடு, மெடிக்கல் நகர், பிகேஎன் நகர் மற்றும் பங்காரு நகர். இங்கு சுமார் 2ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

திண்டல் ஊராட்சியுடன் இருந்தபோது, குடிநீர் பிரச்சனை பெரிய அளிவிற்கு இருந்த தில்லை. ஆனால், மாநகராட்சியுடன் இணைந்த பிறகு அன்றாடம் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது என்கின்றனர் இப்பகுதியினர்.  இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறு கையில், இப்பகுதியில், வாரத்திற்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டும்  காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் குடிநீராக விநியோகிக்கப் படுகிறது. முதல் 20 நிமிடங்கள் வரும்  அந்த தண்ணீரை பயன்படுத்த முடி யாது.

சேறும் சகதியுமாகவே இருக்கும், அடுத்த 40 நிமிடங்கள் வரும் தண் ணீரும், சாக்கடை நாற்றத்துடனே வரு கிறது. மற்ற நாட்களில் குடிநீர் தேவைக் காக அருகில் உள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்பாட்டிற்கு எடுத்து வருகிறோம். அந்த கிணறுகள் அமைந் துள்ள பகுதி தாழ்வான பகுதி என்பதால் சாக்கடை சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து புகார் செய்தாலோ, மனு கொடுத்தாலோ ஆய்வுகள் நடைபெறு கிறது. நிதியில்லை, அடுத்த நிதியாண் டில் பார்க்கலாம் என்று கடந்து போகும் நிலையே உள்ளது.

சில பகுதிகளில் சாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை  பராமரிக்கப்படுவதில்லை. பக்கவாட்டு  சுவர்கள் இடிந்து கிடக்கிறது. சில இடங் களில் அமைக்கப்படவேவில்லை. பாதாள சாக்கடைக்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. எந்த வீட்டிலும் இணைக்கப்படவில்லை. புதிதாக வீடு கட்டி வரி செலுத்தச் சென்றால் பாதாள சாக்கடை இணைப்பிற்கான டெபாசிட் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். ஆனால் இணைப்பு, பயன்பாடு எதுவு மில்லை.  

சாக்கடை அமைத்து, இருப்பதை சீரமைத்து பராமரிக்க வேண்டும். சண் முகம் கடை அருகே செல்லும் ஓடை யில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 அடி பள்ளமான அதனைக் கடக்க பாலம், அமைத்து சாலை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அதில் தவறி விழா மல் செல்ல தடுப்புகள் அமைக்கப் படவில்லை.  இதன் வழியாகவும், பிற வழிகளி லும் சென்று சேரும் சாக்கடைகள் பெரும்பள்ளம் ஓடையில் கலக்கிறது. அதற்கு முன்பாக பல ஆழ்துளைக் கிணறுகள் அமைந்துள்ள இடங்கள், பள்ளங்களை நிறைத்தே செல்கிறது.  திறக்கப்படாத நலவாழ்வு மையம் உடல் நலப் பாதிப்புகளிலிருந்து விடு பட மெடிக்கல் நகரில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக் கப்படவே இல்லை.

இதனால் திண்ட லுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு செல்ல ஈரோடு-பெருந்துறை சாலையைக் கடக்க வேண்டும். வாகன நெரிசலில் சாலையைக் கடப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது. அதை யும் கடந்து சென்றால் மருத்துவம னையில் கூட்டம் அலை மோதுகிறது. நீண்ட நேரம் காத்திருந்தாலும் மருத் துவரை பார்க்க முடியவில்லை. உரிய சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படு கிறது. மாநகராட்சியோடு இணைந் தால் பல வசதிகள் கிடைக்கும் என ஆசைகாட்டினார்கள். இப்போது நாங் கள் மோசம் போனதை உணர்கி றோம், என்றனர். மேலும், பெண்களுக்கென தனி யாக பொதுக்கழிப்பிடம் அமைக்கப் பட்டிருந்தாலும் செயல்பாட்டில் இல்லை.

ஒன்றிய அரசின் திட்டத் தில் தனி நபர் கழிப்பிடங்கள் கட்டப் பட்டதாக கணக்கு எழுதப்பட்டது. கட்டி யவர்களும் பயன்படுத்தும் வகையில் இல்லை என்பதால், திறந்த வெளிக் கழிப்பிடத்திற்கே செல்லும் நிலை உள் ளது. ஆனால், நூறு மடங்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தை ஒட்டி யுள்ள பகுதியாக இருந்து மாநக ராட்சியில் இணைக்கப்பட்டிருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, என்ற னர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, குடியிருப்புகள் அதிகரிப்பு போன்ற வற்றின் காரணமாக ஊராட்சி, பேரூ ராட்சி வார்டுகள் சிலவற்றை மாநக ராட்சியுடன் இணைக்கப்படுகிறது.  

அப்படி இணைக்கும்போது, பல வாக் குறுதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால்  அவை எதுவும் நிறைவேற்றப்படுவ தில்லை மாறாக பல வகைகளிலும் வரி  வசூல் மட்டுமே பிரதானமாக நடக் கிறது என்பதே எதார்த்தமான உண்மை.  எனவேதான் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசு அறிவிப்பு வந்த வுடன் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கொதித்தெழுகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.