districts

img

பேருந்து வசதி கோரி மாதர் சங்கம் மனு

ஈரோடு, டிச. 11- பெருந்துறை அருகே பேருந்து வசதி  கேட்டு அரசு போக்குவரத்து கழக கிளை  மேலாளரிடம் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் புதனன்று மனு  அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த அம் மனுவில் கூறியிருப்பதாவது,

ஈரோடு  மாவட்டம், பெருந்துறை அருகே பணிக் கம்பாளையத்தில் சுமார் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர். இங்கிருந்து பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாண விகள், அரசு மற்றும் தனியார் பணி மற் றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதி இல்லா மல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இத னால், அவர்கள் பெருந்துறைக்கு நடந்து வரும் சூழ்நிலை உள்ளது. தங்கள் கிராமத்திலிருந்து பெருந் துறை, சென்னிமலை ஆகிய பகுதிக ளுக்குச் செல்ல வெள்ளோடு சாலை,  பணிக்கம்பாளையம் பிரிவு வரை நடந்து  வந்து பேருந்தினை பிடிக்க வேண் டும். அதேபோல சென்னிமலை செல்ல வும் அதே நிலைதான். எனவே, ஆட்டோ  பிடிக்க வேண்டியுள்ளது. ஆட்டோ விற்கு ரூ.80 முதல் 100 செலவாகிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் அவ்வ ளவு தொகை செலவு செய்ய இயலாத நிலை உள்ளது.

மேலும், மகளிர் இலவச  பேருந்து பயணத்தையும் மேற்கொள்ள  இயல்வதில்லை. எனவே, பெருந்துறை பேருந்து நிலையம் முதல் பணிக்கம்பாளையம் வரை வந்து செல்லக்கூடிய வகையில்,  இரு வழிகளிலும் பேருந்து வசதி செய்து  தர வேண்டும் என  அரசு போக்கு வரத்துக் கழக பெருந்துறை கிளை மேலாளரிடம் மனு அளித்தனர். முன்னதாக, அனைத்திந்திய மாதர்  சங்க மாவட்டத் தலைவர் டி.வசந்தா தலைமையில் மாவட்டச் செயலாளர் பா.லலிதா, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.சாமியாத்தாள் மற்றும் சாமி யாத்தாள் ஆகியோர் இந்த மனு  கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்ற னர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஆர். அர்ச்சுனன், தாலுகா கமிட்டி உறுப்பினர்  பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.