districts

img

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலையை அனுமதியோம்!விதொச போராட்டம்

விதொச போராட்டம் ஈரோடு, டிச.17- கொடுமுடி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு சுற்றுச்சூழலை மாசு படுத்தும் தேங்காய் நார் தொழிற் சாலையை அனுமதிக்க மாட்டோம்  என வலியுறுத்தி, அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிப்பாளையம் ஊராட்சி யில் தேங்காய் நார்க்கழிவைக் கொண்டும், வேதிப்பொருட்க ளைப் பயன்படுத்தியும் ஏற்றுமதிக் கான பொருள் தயாரிக்கும் கொங்கு  காயர்ஸ் தனியார் நிறுவனத்தை அனுமதிக்காமல் இடமாற்றம் செய்ய வேண்டும். குடிநீர் உட்பட நிலத்தடிநீர் ஆதாரத்தையும், வேளாண் நிலங்களை விஷமாக்கா மல் பாதுகாத்திடவும் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என இச்சிப் பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

2021 ஆம் ஆண்டு கொடுமுடி வருவாய் வட் டாட்சியர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், ஆலையை இயக்க மாட்டோம் என ஆலை நிர்வாகத்தினர் எழுத்துப் பூர்வமாக தந்த உறுதி மொழியை மீறி, தொழிலுக்கும், கட்டிடங்க ளுக்கும் எவ்வித அனுமதியும் பெறாமல் ஆலையை இயக்கி வந் துள்ளனர்.  இதனைக் கண்டித்து கொடு முடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தினர் தலை மையில் செவ்வாயன்று குடும்ப  அட்டை, ஆதார் அட்டை, வாக்கா ளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவ ணங்களை திரும்ப ஒப்படைக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், மக் களிடம் அரசின் உயரதிகாரி களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். விதொச வின் போராட்டத்தையடுத்து, அப் பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.  இப்போராட்டத்திற்கு, அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டத் தலைவர்  ஆர்.விஜயகுமார் தலைமை வகித் தார்.

மாநிலப் பொருளாளர் ஏ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கே.எஸ்.சண்முகவள்ளி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.கனக வேல் ஆகியோர் விளக்க உரை யாற்றினர். டிஆர்இயு டிவிசன் நிர் வாகி சி.முருகேசன், சிபிஎம் தாலு காச் செயலாளர் எம்.சசி ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். இதில், ஏராள மான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடி வில், ருக்மணியம்மாள் நன்றி கூறி னார்.