districts

img

மீனவர் நலத்துறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.10- உள்நாட்டு மீனவர்களை அலைக்கழிக்கும் மீன்வளம் மற் றும் மீனவர் நலத்துறையைக் கண் டித்து பவானிசாகர் மீனவளத்துறை  உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பினர் செவ்வாயன்று கருப் புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அணை ஏரி  குளம் குட்டைகளில் உள்நாட்டு  மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சங் கங்களுக்கே மீன்பிடிக்க உரிமை  உண்டு என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமுலாக்க வேண்டும்.  இதற்கு மாறாக பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அரசா ணையை அமலாக்க கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் செவ்வாயன்று ஈரோடு மாவட் டம், பவானிசாகரில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மீன்பிடி தொழிற்சங்க கூட் டமைப்பின் மாநிலத் தலைவரும், சிஐடியு மாநில துணைப் பொதுச்  செயலாளருமான வி.குமார் தலைமை வகித்தார். கூட்டமைப் பின் மாநில பொதுச் செயலாளர்  எஸ்.அந்தோணி சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் வாழ்த்தி பேசி னார். மீனவர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் ஏ.கே.பழனிசாமி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு  மாவட்டத்  தலைவர் பி.பி.பழனிச்சாமி, அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் கே. ஆர்.விஜயராகவன், பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன் னாள் தலைவர் சுப்பிரமணி, சிபிஎம்  அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன், கோவை கூட்டு றவு தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

பவானிசாகர், அந்தியூர், பி.மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், அன்னூர், மேட்டுப் பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கருப்புக் கொடி  ஆர்ப்பாட்டத்தில் கருப்புக் கொடி பிடிக்கக் கூடாது. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரை மறைக்க வேண்டும் என்று காவல் துறை அராஜகமாக நடந்து கொண் டதால், அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.