ஈரோடு, டிச. 17- சத்தியமங்கலம் அருகே மதுக் கடை இல்லாத கிராமத்தில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பகுதி உக்கரம் ஊராட்சியில், மதுக் கடைகள் எதுவும் கிடையாது. புளி யம்பட்டி செல்லும் வழியில் நம்பி யூர் தாலுகாவிற்குட்பட்ட காவிலி பாளையத்தில் ஒரு கடையும், சத்தி யமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி மற்றும் விண்ணப் பள்ளியிலும் தலா ஒரு அரசு மது பான சில்லரை விற்பனை கடை உள்ளது. மதுக்கடையே இல்லாத இந்த ஊராட்சிக்குள் உக்கரத்தில் சரஸ் வதி மெட்ரிகுலேசன் பள்ளி அரு கில் கிடங்கு அமைத்து 24 மணி நேர மும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு மதுவிற்பனை நடைபெறுவ தால் அனைத்து தரப்பினரும் வெகு வாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தபோதும், கண் துடைப்பாக சில நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனால். தொடர்ந்து மது விற்பனை என்பது தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டே உள் ளது.
எனவே, இப்பகுதியில் கள்ள மது விற்பனையை முற்றிலுமாக தடுத்திடக்கோரியும், மதுவிற் பனையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தி யமங்கலம் தாலுகாச் செயலாளர் முருகன் தலைமையில் பாதிக்கப் பட்ட மக்கள் மனு கொடுத்தனர். இதில், கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ். சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. எம்.விஜயகுமார், வி.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.