districts

img

கிராம மக்கள் சாலை மறியல்

திண்டிவனம், டிச. 1- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிகின்றன. இந்த கிராமத்தில் இருந்து அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் திண்டிவனம் சென்று படித்து வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுதில்லை. மேலும் ஆவணிப்பூரில் இருந்து வரும் பேருந்து களும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் மாலை நேரங்களில் இரவு 8 மணிக்கு மேல் பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு வருவ தால்  பெற்றோர் அச்சத்துடனே இருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஆவணிப்பூரிலிருந்து திண்டிவனமும், திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூரும் வந்த அரசு பேருந்து களை சிறப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் பணி மனை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பிறகு, முறையாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.